மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
woman police

மெரினா கடற்கரை சாலையில் டேங்கர் லாரி மோதியதில் ஆயுதப்படை பெண் காவலர் உயிரிழந்துள்ளார். சென்னை ஆயுதப்படையைச் சேர்ந்த மகளிர் போலீஸ் பவித்ரா. இவர் இன்று நந்தனத்தில் பணிபுரிவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பாரதி சாலையில் இருந்து சென்னை மெரினா கடற்கரை சாலைக்கு திரும்பும் போது, பாரிஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பவித்ரா எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையர் (கிழக்கு) பெரோஸ்கான் அப்துல்லா நேரில் விசாரணை நடத்தினார். மேலும், லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.