
சென்னை: காவேரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் திமுக,. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை அபாயக் கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஏதாவது வருந்தத் தக்க செய்தி வருமானால் அடுத்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து குடும்பத்தினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ள நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். மு.க.அழகிரி, கனிமொழி, முரசொலி செல்வம், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி ஆகியோரும் ஸ்டாலினுடன் சென்றிருந்தனர்.
இதனால், அடுத்து நடைபெற வேண்டிய ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கருணாநிதி குறித்த அடுத்த கட்ட அறிக்கையை இன்று மாலை 6 அளவில் வெளியிடுவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் இருவேறு குழப்ப நிலையில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அப்போது கருணாநிதி உடல் நிலை குறித்து ஒருவேளை விரும்பத்தகாத செய்தி வந்தால் மெரினாவில் ஏற்பாடு செய்யவேண்டும் என்று திமுக.,வினர் பேசியுள்ளனர். ஆனால், மெரினாவில் இடம் கொடுக்கக் கூடாது என்பதே அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரின் ஒருமித்த கருத்தாக உள்ளதாம்!
இதனிடையே சமூக வலைத்தளங்களில் பரவலாக பல்வேறு கருத்துகள் உலாவருகின்றன. முன்னர் காமராஜர் காலமான போது பதவியில் இல்லாத முன்னாள் முதல்வருக்கெல்லாம் மெரினாவில் இடம் இல்லை என்று முதல்வராக இருந்த கருணாநிதிதான் கூறினார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
இது குறித்த விவாதங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது.




காமராஜர௠காலமானபோதà¯, à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯à®•à¯à®•ெலà¯à®²à®¾à®®à¯ மெரினாவில௠இடமிலà¯à®²à¯ˆ எனà¯à®±à¯ இநà¯à®¤ à®®à¯à®©à¯à®©à®¾à®³à¯ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ கூறினாரà¯, இவர௠அபà¯à®ªà¯‹à®¤à¯ சொனà¯à®©à®¤à¯ தி.à®®à¯.க. வை ஆளà¯à®®à¯ கà¯à®Ÿà¯à®®à¯à®ªà®¤à¯à®¤à®¾à®°à¯à®•à¯à®•௠தெரியாமல௠போனதே, à®à®©à¯ ?