சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை அபாயக்கட்டத்தில் உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, படிப்படியாக அரசு பேருந்து சேவையை பாதுகாப்பு காரணங்களுக்காக குறைக்க உத்தரவிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
முன்னதாக, இன்று பிற்பகல், காவேரி மருத்துவமனை அருகே நின்றிருந்த சன் டிவி கார் மீது திமுக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.




