கோஹ்லி ஒன்றும் சிறந்த வீரர் இல்லை, கர்வமாக பேசிய இங்கிலாந்து பயிற்சியாளர்

Published:

05 Aug 08 Cricket - 2026இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள் மூலம் கோஹ்லிக்கு நெருக்கடி கொடுப்போம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்தார். கோஹ்லியை தவிர மற்ற வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சொதப்பி வருகின்றனர்.

இதனால் இங்கிலாந்து அணிக்கு ஒரே தலைவலியாக இருப்பது கோஹ்லி மட்டும் தான், அவரையும் எப்படி அவுட்டாக்குவோம் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், விராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இல்லை. அந்த நிலையை நெருங்கி வருகிறார். முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் கோஹ்லி விளையாடியது உயர்தர ஆட்டம். இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நாங்கள் நெருக்கடி கொடுத்தால், அது கோஹ்லியிடம் சென்று அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும், இதன் மூலம் அவர் விரைவில் அவுட்டாவார் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img