
இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட், பர்மிங்ஹாம், ஜூலை 2 முதல் 6 வரை
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
இந்தியா முதல் இன்னிங்கிங்க்ஸ் (151 ஓவர்களில் 587, ஷுப்மன் கில் 269, ஜதேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாஷிங்க்டன் சுந்தர் 42, கருண் நாயர் 31, ரிஷப் பந்த் 25, ஷோயப் பஷீர் 3/167, வோக்ஸ் 2/81, ஜோஷ் டாங் 2/119, கார்சே 1/83, ஸ்டோக்ஸ் 1/74), இரண்டாவது இன்னிங்க்ஸ் (83 ஓவர்களில், 427/6 டிக்ளேர்ட், ஷுப்மன் கில் 161, ஜதேஜா 69, ரிஷப் பந்த் 65, கே.எல் ராகுல் 55, ஜெய்ஸ்வால் 28, கருண் நாயர் 26, ஜோஷ் டாங் 2/93, ஷோயிப் பஷீர் 2/119, கார் சே 1/56, ஜோ ரூட் 1/65)
இங்கிலாந்து முதல் இன்னிங்க்ஸ் (89.3 ஓவர்களில், ஜேமி ஸ்மித் 184, ஹாரி ப்ரூக் 158, ஜோ ரூட் 22, க்ராவ்லி 19, முகமது சிராஜ் 6/70, ஆகாஷ் தீப் 4/88) இரண்டாவது இன்னிங்க்ஸ் (68.1 ஓவர்களில் 271 ஆல் அவுட், ஜேமி ஸ்மித் 88, கார்சே 38, ஸ்டோக்ஸ் 33, பென் டக்கட் 25, ஓலி போப் 24, ஹாரி ப்ரூக் 23, ஆகாஷ் தீப் 6/99, முகமது சிராஜ் 1/57, பிரசித் கிருஷ்ணா 1/39, ஜதேஜா 1/40, சுந்தர் 1/28). இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பர்மிங்ஹாமில் நடந்த இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அற்புதமானதொரு வெற்றிபெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது அதுவும் SENA நாடொன்றில் வெற்றி பெறுவதென்பது மகழ்வான விஷயம்தான் SENA நாடுகள் என்றால் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை. இவை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுபவை. அதுவும் இந்திய அணியில் முன்னனி பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் நம் அணி சாதித்துதான் இன்னுமே என்னால் நம்ப முடியாமல் ஆச்சர்யமான விஷயம்.
டாஸ் வென்று இங்கிலாந்து, இந்தியர்களை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் 2 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 87 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்து கருண் நாயர் 31 ரன்கள் எடுக்க, அடுத்து விரிந்தது, டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு அற்புதமான நிகழ்வு. இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில்லின் இரட்டைச் சதம். என்ன ஒரு அருமையான பேட்டிங். ஆர்பாட்டமில்லாத அமைதியான ஆனால் எதிர் அணியின் பந்துவீச்சு முதுகை மொத்தமாக முறித்து போட்டதொரு பேட்டிங் இது. 269 ரன்கள். ஜடேஜாவின் அற்புதமான 89 ரன்கள் மற்றும் சுந்தரின் 42 ரன்களுடன் இந்தியா 587 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஆகாஷ் தீப் மற்றும் முகமது சிராஜின் அற்புதமான பந்து வீச்சில் வெறும் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, ஸ்மித் (184 ரன்கள்) மற்றும் புரூக்ஸ் (158 ரன்கள்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங்னால் தான் 407 ரன்களையாவது எடுக்க முடிந்தது. சிராஜ் (6 விக்கெட்டுகள்) மற்றும் ஆகாஷ் தீப் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் அற்புதமான பந்து வீச்சு இங்கிலாந்தின் பேட்டிங்கை ஊதி தள்ளியது.
180 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுல் 51 ரன்கள் அடிக்க ஷுப்மன் கில் மீண்டும் தன்து அற்புதமான தொரு பேட்டிங்கை வெளிப்படித்தி 169 ரன்கள் அடித்தார். பந்த் 65 ரன்கள் மற்றும் ஜதேஜா இந்த இன்னிங்ஸிலும் அருமையாக ஆடி 69 ரன்கள் அடிக்க இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 427 ரன்கள் அடித்து 607 ரன்கள் முன்னிலை பெற்று டிக்ளர் செய்தது.
608 ரன்கள் என்கிற கடுமையான இலக்கை நோக்கிய இங்கிலாந்தின் பேட்டர்கள் நல்ல தொடக்கம் கிட்டியும் தொடர்ந்து சீரான இடைவெளியில் அவுட்டாக, அந்த அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SENA நாடு ஒன்றில் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது உண்மையிலேயே அற்புதமான விஷயம். ஆகாஷ் தீப் அற்புதமாக பந்து வீசி, இரண்டாவது இன்னிங்க்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
எந்தவித வேரியஷனும் இல்லாத அருமையான ரோடு போல இந்த பிட்சும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் அளிக்காத பிளாட் பிட்ச்சில் பும்ரா இல்லாத இந்திய வேகப் பந்துவீச்சு சாதித்தது உண்மையிலேயே பெருமையான விஷயம். இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது அளித்தது மிக சிறப்பானதொரு தேர்வு. ஆகாஷ் தீப் இந்த போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் எடுத்தது சிறப்பானதொரு விஷயம்.
ஒரே சமயத்தில் இந்திய அணி, இந்தியா ஏ அணி, இந்திய 19 வயதிற்குட்டோர் அணி, இந்தியப் பெண்கள் அணி என நான்கு அணிகள் இங்கிலாந்தில் பயணம் செய்கின்றன. ஒவ்வொரு அணியும் சிறப்பாக ஆடி வருகிறது. ஜூலை 4ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடந்த ஒரு டி20 போட்டியில் ஒந்திய பெண்கள் அணி இங்கிலாந்து பெண்கள் அணியை, 16.1 ஓவரில் 146 ரன் எடுத்திருந்த அணியை, 20 ஓவருக்குள் 171/9 என்ற ஸ்கோருக்குள் அடக்கினர். இது ஒரு உலக சாதனையாகும். 25 பந்துகளில் 7 விக்கட்டுகள் எடுத்தது ஒர் சாதனை. ஆனால் அந்த டி20 ஆட்டத்தில் இந்தியப் பெண்கள் அணி தோல்வியைச் சந்தித்தது.
ஜூலை 5ஆம் தேதி நடந்த 19 வயதிற்குட்பட்டோர் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி 78 பந்துகளில் 143 ரன்கள் அடித்தார். இவர் 52 பந்துகளில் சதம் கடந்தது ஓர் உலக சாதனை. அவருடன் இணைந்து விஹான் மல்ஹோத்ரா 121 பந்துகளில் 129 ரன் அடித்து இரண்டாவது விக்கட்டிற்கு 219 ரன் சேர்த்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இவ்வாறு இந்திய அணிகள் இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது.





