
இலக்கியச் சாரல் அமைப்பானது கவிமாமணி இளையவன் அவர்களால் தொடங்கப்பட்டு இலக்கியச் சாரல் இதழ் 25 ஆண்டுகளாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. முதலில் செய்தி மடலாக வெளியிடப்பட்டு பின் வந்த வருடங்களில் இதழாக வந்துக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இலக்கியச் சாரலின் புத்தாண்டு – பொங்கல் இதழ், இலக்கியச் சாரலின் துணை இதழான ‘சாரல்’ – ஆங்கில ஏடு மற்றும் இலக்கியச் சாரல் செய்திமடல் தொகுப்பினை (2000 – 2001) நிறுவனர் கவிமாமணி இளையவன், சென்னை காந்தி மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
இலக்கியச் சாரலின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் என நான்கு தலைமுறையின் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். காவியக் கன்றின் உறுப்பினர்களும் நான்காம் வகுப்பு மாணவிகளான இமிழிசை காத்யாயினி, தன் இனிய குரலால் கடவுள் வாழ்த்து பாடினார் மற்றும் திவான்ஷி, வேலு நாச்சியாரைப் பற்றி உரையாற்றினார். யூ.கே.ஜி படிக்கும் க்ருத்விக், ஐந்து திருக்குறளை சொன்னார்.
இலக்கியச் சாரல் நிறுவனர் இளையவன், மூத்த உறுப்பினர்கள் சுந்தர மகாலிங்கம், நல்லப்பெருமாள், விஜயலெக்ஷ்மி நாராயணன் ஆகியோர் தங்கள் உரையினால் உறுப்பினர்களுக்கு வழிகாட்டினர்.
ரெ. முரளி, (ஆசிரியர், இலக்கியச் சாரல்), நாகராஜன், முன்னாள் தலைவர், எஸ். நாராயணன், டாக்டர் பிரதீபா மஹாலெக்ஷ்மி, தி. கோவிந்தராஜன், திருமதி சத்தியப்ரியா, ஜெயஸ்ரீ சாரி, ஆசிரியர், சாரல், கம்பதாசன் கோகுல் ராம், பரமேஸ்வரி, ராஜேஸ்வரி காசிநாதன், எஸ். சூர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




