
‘கனமான’ அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. அமெரிக்க செயற்கைக்கோள் ‘ புளூபேர்ட்’ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.54க்கு எல்.வி.எம் . , 3 ராக்கெட் வாயிலாக , புளூபேர்ட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்
இந்த ‘ புளூபேர்ட்’ செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம் தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது . இதன் எடை 6500 கிலோ. இது தொலைதூர கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை பாரதத்தின் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது . ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் பகுதியாக இது வெற்றிகரமாக ஏவப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி, வணிக ரீதியில் ராக்கெட்டுகளை ஏவுவதில் , உலக சந்தையில் முக்கிய இடத்தை இந்தியா பிடித்துள்ளது . வளர்ச்சி அடைந்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும் . நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள் . விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்திய இளைஞர்களால் இயக்கப்படும் நமது விண்வெளித் திட்டம் மிகவும் மேம்பட்டதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது . எல் . வி . எம் . , மூன்று ராக்கெட் வாயிலாக செயல்திறனை வெளிப்படுத்துவது வாயிலாக , ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளங்களை வலுப்படுத்துகிறோம் . வணிக ஏவுதள சேவைகளை விரிவுபடுத்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில்,
இந்திய விண்வெளித் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்…
இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான அமெரிக்காவின் விண்கலமான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ அதன் நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இது இந்தியாவின் கனரக-தூக்கும் ஏவுதள திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுதள சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை வலுப்படுத்துகிறது. இது ஒரு ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) பாரதத்தை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். நமது கடின உழைப்பாளி விண்வெளி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள். விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து உயர்ந்து வருகிறது! – என்று குறிப்பிட்டுள்ளார்.




