எனக்கு எழுத பேச தெரியாது: சுய பச்சாதாபம் தேடும் ஸ்டாலின்!

பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
MK Stalin - 2026

என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செலவு செய்து அதிகாரத்தை பயன்படுத்தி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர்.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல மத்தியரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெற்றி சாதாரணமாக கிடைக்காது, கிடைக்கவும் விட மாட்டார்கள். நம்மிடம் ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது.

எனக்கு கலைஞரை, போன்று பேசவோ தெரியாது எழுதவோ தெரியாது, ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

முரசொலியை மூடுவோம் என பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகிறார். அதை பூட்டுப்போட நாங்கள் விட்டுவிடுவோமா? முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்திருந்தால் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பார்களா? கொள்ளை கூட்டத்தை வெளியனுப்புவோம்” என பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.