சுப ஹோரை சுப ஹோரைன்றாங்களே… அது என்ன? ஹோரை காலத்தை எப்படி அறிவது?

horai2 - 2026

ஹோரை காலம் அறிய எளிய வழிகள்: கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும். ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.

ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களின் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரமே ஹோரை என்றழைக்கப்படும்

இதில குரு,புதன்,சுக்கிரன், வளர்பிறை சந்திரனுடைய ஓரைகள் சுப ஓரைகள்.. சுபகாரியங்களுக்கு மிகவும் ஏற்றது.

சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் சுபகாரியங்களுக்கு ஏற்றதல்ல.. விலக்கப்பட வேண்டியது… அதிலும் குறிப்பாக சனி ஓரை முழுக்க முழுக்க தீமை பயக்க கூடியது. விபத்து நடப்பது பெரும்பாலும் இந்த ஹோரையில்தான்…சனி ஓரையில் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் கேட்கக்கூடிய கேள்வி..
நோயை பற்றியது.விபத்தை பற்றியதாக தன்னுடைய வருமையை பற்றியதாக கேள்விதான் என்னிடம் கேட்பார்கள்.. நோய் எப்போது தீரும்?? மருத்துவ செலவு செய்தால் இவர் பிழைப்பாரா? என்பது போல

செவ்வாய் ஓரையும் கிட்டத்தட்ட சனி ஓரையை போலத்தான் இதுவும் நன்மை பயக்காது.இந்த ஓரையில் கடன் வாங்க கூடாது. அடைக்கவே முடியாது. கடனை கட்டலாம். ஒரு பகுதி கடனை செவ்வாய் ஓரையில், செவ்வாய் கிழமையில் அசபதி நட்சத்திரத்தில், அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் மேச,விருச்சிகம் லக்னமாக வரும் போது செவ்வாய் ஓரையில் கடனை அடைக்கலாம்.கடன் தீரும் .செவ்வாய் யுத்த கிரகம். செவ்வாய் ஓரையில் வம்பு, வழக்கு, யுத்தம் இவைகளை தரும்.இந்த ஓரையை சுபகாரியங்களுக்கு சுத்தமாக விலக்க படவேண்டும்..

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 2 - செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

என்னிடம் சூரியன் ஓரையில் வருபவர்கள் தந்தை பற்றிய கேள்விகள் இருக்கும். அரசு வேலை கிடைக்குமா?என்பது பற்றிய கேள்வி இருக்கும். சிவ வழிபாடு செய்து கொள்ள, அரசு பதவி ஏற்க,அரசு உதவி பெற,தந்தை வழி ஆதாயங்களுக்கு இந்த ஓரை சிறந்தது.

வளர்பிறை சந்திர ஓரையில் வெளிநாட்டு பிரயாணங்கள் மேற்கொள்ள, திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு ஏற்றது.அம்பாள் வழிபாடு, கற்பனைகளை மூலதனமாக கொண்ட எந்த வேலையும் செய்யலாம். கதை,கவிதை, எழுதுவது போன்றவை.

புதன் ஓரையில் கல்வி சம்பந்தப்பட்ட விவகாரங்கள்,வியாபாரம் ஆரம்பிக்க, திருமணம் போன்ற சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது இந்த புதன் ஓரை.

குரு ஹோரை 100/100 சுப ஓரை.இதில் எந்தவிதமான சுபகாரியங்களும் செய்யலாம். ஆலய கும்பாபிஷேகம், திருமணம், கல்வி, வித்யாரம்பம், போன்ற சகல சுபகாரியங்களுக்கும் ஏற்றது.

சுக்கிரன் ஓரையில் என்னிடம் வருபவர்கள் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான கேள்விகளையே கேட்பார்கள். சுக்கிரன் ஓரையில் பணம் கடனாக தரக்கூடாது. வரவேண்டிய பணத்தை வசூல் செய்து கொள்ளலாம்..

கலைகளுக்கு உரிய கிரகம் சுக்கிரன். ஆடல்,பாடல் போன்ற ஆய கலைகள்64 ஐயும் கற்றுக்கொள்ள சுக்கிரன் ஓரை சிறப்பானது.காதல் விவகாரங்களுக்கு ஏற்ற ஓரை.சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்ற ஓரை.அலங்கார ஆடம்பர பொருட்கள் வாங்க உகந்த ஓரை இந்த சுக்கிரன் ஓரை.சினிமா படப்பிடிப்பு இந்த ஓரையில் துவங்கலாம். பெண் பார்க்க இந்த ஓரையில் செல்லும் போது வெற்றி உறுதி.

ALSO READ:  பஞ்சாங்கம் மே 30 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ஒவ்வொரு நாளும் அன்று என்ன கிழமையோ அந்த கிழமைக்குரிய ஹோரையே முதலில் இடம் பெறும். இன்று திங்கள்கிழமை. காலை ஆறு மணிமுதல் ஏழுமணிவரை சந்திர ஓரையே முதலில் வரும் ஞாயிற்றுக்கிழமை எனில் சூரியன் ஓரை அந்த நாளின் முதலில் வரும்.

horai1 - 2026

சரி அடுத்து வரும் ஓரை எது? ஞாயிற்றுக்கிழமை தொடங்கி எண்ணிவரும் ஆறாவது நாள் அடுத்த ஓரையாகும்.அதாவது சுக்கிர ஓரை.வெள்ளிக்கிழமை சுக்கிரன் ஆதிக்கம் உள்ள நாள் தானே

அடுத்த ஓரை வெள்ளிக்கிழமை யிலிருந்து எண்ணிவரும் ஆறாவது நாள். அதாவது புதன்கிழமை. அப்ப அடுத்து வருவது புதன் ஓரை.

அதற்கு அடுத்து வரும் ஓரை அடுத்த ஆறாவது நாளான திங்கள் கிழமையாக வரும்.
எனவே சந்திர ஓரை

இப்படியே மற்ற ஓரைகளையும் கண்டுபிடித்து கொள்ளுங்கள்.இதற்கும் பார்முலா உண்டு.

“சூட்சுமம் சுலபத்தில் புரியவேண்டின் சந்தர்ப்பம் சனியாகாமல் குருவாய் செயல்படவேண்டும்”

இதில் உள்ள முதலெழுத்துக்கள் அந்தந்த ஹோராதிபதியை குறிக்கும்

சூட்சமம் _முதலெழுத்து_சூ

ஞாயிறு காலை 6_7 சூரிய ஓரை

அடுத்த ஓரை சுலபத்தில்
_சு__சுக்கிரன்

ALSO READ:  பஞ்சாங்கம் மே 29 - வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

7__8 சுக்கிர ஓரை

புரியவேண்டின்

பு_முதலெழுத்து

8_9 புதன் ஓரை

அடுத்த ஓரை உங்களுக்கே தெரியும்

சந்தர்ப்பம்__சந்திர ஓரை

9–10 சந்திர ஓரை

10__11 சனிஓரை

11__12 குரு ஓரை

12__1 செவ்வாய் ஓரை

இந்த ஏழு வார்த்தைகளைஅடங்கிய வாக்கியம் ஏழு ஹோரைகளையும் வரிசையாக தெரிவிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு எளிமையான வழி இருக்கிறது …

ஓரையை சுலபமாக அறிந்து கொள்ள ஒரு ராசிக்கட்டம் வரைந்து, சூரியனை உச்ச வீட்டிலும், சுக்கிரன், புதன்,சந்திரன்,சனி,குரு, செவ்வாய் இவர்களை ஆட்சி வீட்டிலும் குறித்து கொண்டு ஓரையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

இப்ப உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஓரை சூரியன் ஓரை,இரண்டாவது ஓரையாக சுக்கிரன் ஓரை வரும்,மூன்றாவதாக புதன் ஓரை,நான்காவதாக சந்திரன் ஓரை, ஐந்தாவதாக சனி ஓரை,ஆறாவதாக குரு ஓரை,ஏழாவதாக செவ்வாய் ஓரை புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

– ஆஸ்ட்ரோ விஸ்வநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories