அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள்.
ஆங்க்ரி யெங் மேன் ராஜசேகரின் பெண்கள் சிவானி, சிவாத்மிகா ஹீரோயின்களாக வெற்றி பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்கள். அக்கா தங்கை இருவரும் ஒரே ஹீரோவோடு இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார்கள். தாயைப் போலவே தாமும் கூட நல்ல ஹீரோயினாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்கள்.
சிவானி, அடவி சேஷ் என்ற நடிகருடன் ஜோடியாக ஒரு ஹிந்தி ரீமேக்கில் நடித்தார். ஆனால் அந்த சினிமா நின்றுபோனது.
ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா சுரேஷ் ப்ரொடக்ஷனில் தொரசானி சினிமாவில் ஹீரோயினாக திரையில் அரங்கேற்றம் செய்து நடிகையாக நல்ல மார்க்கு வாங்கி விட்டார். கிருஷ்ண வம்சி இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா சினிமாவில் கூட நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அக்கா சிவானி மட்டும் நல்ல என்ட்ரி கொடுக்க எதிர்பார்த்திருக்கிறார். இந்த பின்னணியில் இளம் ஹீரோ அதிதி அருணுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து ரசிகர்களின் முன் வருவதற்கு தயாராக உள்ளார்.
கேமராமேனாக தனக்கென்று ஒரு சிறந்த அடையாளத்தை பெற்றுள்ள கேவி குஹன் 118 திரைப்படத்தால் இயக்குனராக மாறியுள்ளார். ஆனால் அந்த படம் நினைத்தபடி ஹிட்டாகவில்லை. இந்த பின்னணியில் இந்த முறை சிறிய சினிமா எடுக்க திட்டமிட்டு அதில் அதிதி அருண், சிவானி ராஜசேகர் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த சினிமா கூட முன்னைப் போலவே ஆகாமல் டெக்னோ திரில்லர் ஜானரில் திரையில் வர உள்ளது. சூட்டிங் முடிந்து போன நிலையில் உள்ளது.
அதிதி அருணோடு ஜோடியாக ராஜசேகரின் சிறிய மகள் சிவாத்மிகா விதி விலாசம் என்ற சினிமாவில் நடிக்கிறார். இந்த சினிமா விரைவில் வர உள்ளது.
ஒரே ஹீரோவோடு ராஜசேகரின் இரு மகள்களும் பேக் டு பேக் திரைப்படம் செய்வது சிறப்பாக பேசப்படுகிறது.