திருப்பரங்குன்றம் கோயில் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

சற்றுமுன் மதுரை
IMG WA
IMG WA

மதுரை

  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை திறக்க கோரி இந்து முன்னணியை சேர்ந்த 9 பேர் நூதன போராட்டம்*

கொரோனா தொற்று காரணமாக 62 நாட்களாக கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு வருகைக்கு தடை விதித்தும் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலை திறக்கக்கோரி கோவிலின் வாசலில் முன்பாக இந்து முன்னணி இயக்கத்தினர் 9 பேர் தோப்புக்கரணம் இட்டு நூதன போராட்டம் செய்தனர்.

இந்த நூதன போராட்டத்தில் கோவில்களை திறக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப் பட்டு கோவில் வாசல் முன்பாக சூடம் ஏற்றி பிறகு தோப்புக்கரணம் போட்டு போராட்டம் செய்தனர்.

செய்தி : ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.