
ஊஞ்சலாடி மகிழும் பாட்டி.
கொஞ்சம் வயதானாலே… சிறிது அதிகம் நடந்தாலோ அங்குமிங்கும் சென்று வந்தாலோ வீட்டில் உள்ள மகனும் மருமகளும் தடுப்பார்கள். இன்னும் என்ன இளம்வயதா உனக்கு? ஓர் இடத்தில் உட்காராமல் எதற்காக வீணாக சுற்றுகிறாய்? நாளைக்கு இடுப்பு வலி கால் வலி என்றால் யார் பார்ப்பார்கள்? போட்டதை சாப்பிட்டு கிருஷ்ணா ராமா என்று ஓரிடத்தில் படு என்பார்கள்.
அப்படி இருக்கையில் இத்தகைய முதிய வயதில் இந்தப் பெண்மணி செய்யும் வேலையை பாருங்கள். கண் சொருகி தலை சுற்றுகிறதா?
‘சிறுமல்லிப்பூவா’ பாட்டில் ஸ்ரீதேவி கூட இத்தனை வேகமாக ஊஞ்சலாடி இருக்கமாட்டார். யாரும் ஆட்டிவிடாமலே மான்போல் துள்ளி ஊஞ்சல் மேல் ஏறி நின்று ஆடுகிறார் இந்த முதியவர்.
இவர் பெயர் ஜெயம்மா. அனந்தபுரம் மாவட்டம் பிராமணபல்லி கிராமத்தை சேர்ந்தவர். வயது 76. ஆனால் இவர் ஜோராக நடந்து வருவதைப் பார்த்தால் 16 வயது குமரி போலுள்ளார். அந்தக் கால உணவு அப்படிப்பட்டது.
இவர் காலை ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். உடனே அரைமணி நடைபயிற்சி. பின் உடற்பயிற்சி. பகல் 12 மணிக்கு மதிய உணவு. இரவு 7 மணிக்கே இரவு உணவுண்டு 8 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்.
தினையரிசி, ராகிகூழ், கீரைகள் இவர் உணவு. உடலை திடமாக வைத்திருப்பதற்கு இந்த உணவு வகைகளே காரணம் என்கிறார்.
இந்த வீடியோவை பார்ப்பவர்கள் 100 வயதை தாண்டினாலும் இவர் இப்படியே ஊஞ்சல் ஆடுவார் போலும் என்று வியக்கிறார்கள்.