விருதுநகர் அருகே காய்கறி – செங்கல் லாரிகள் மோதல்; க்ளீனர் உள்பட இருவர் உயிரிழப்பு!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் மதுரை
virudunagar bus lorry accident
virudunagar bus lorry accident

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் கிளினர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் கே. செவல்பட்டி கண்மாய் அருகே மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி பஞ்சர் ஏற்பட்டு பழுதானது. இதை அடுத்து, சாலையோரத்தில் பஞ்சர் பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது
அதே திசையில் மினி லாரி வாகனம் (காய்கறி வாகனம் ) அதிவேகமாக லாரியின்
பின்பக்கம் வந்து மோதியது.

virudunagar bus lorry accident
virudunagar bus lorry accident

காய்கறி லாரி மோதியதில் செங்கல் லாரியின் பின்னால் நின்று கொண்டு
இருந்த ராஜாங்கம் என்பவர் டயருக்கு அடியில் அடிபட்டு நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாரிமுத்து, முரளி ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

virudunagar bus lorry accident
virudunagar bus lorry accident

செல்லும் வழியில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.