வி.ஐ.பி.யை இப்படி செல்பி எடுக்குறது சரியா? #சிவகுமாரின்_விளக்கம்

சற்றுமுன் சினி நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்

sivakumar selfie - 2026

மதுரை: மதுரையில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். அதை கவனித்த சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டார். இந்த வீடியோ பதிவு இன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் சிவகுமாரை வசை பாடித் தீர்த்தனர்.

இந்நிலையில், நடிகர் சிவகுமார் தனது செயலுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் இப்படி…

“செல்ஃபி எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் லேக், ஊட்டி தொட்டபெட்டா போய் அதை கம்போஸ் செய்து எடுக்கும் விவகாரம். அது பர்சனல் சமாச்சாரம். அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது இடத்தில் ஒரு 200, 300 பேர் கலந்துகொள்ளும் விழாவுக்குப் போகும்போது காரிலிருந்து இறங்கி மண்டபத்துக்கு போகும் முன்பு பாதுகாப்புக்குச் செல்லும் ஆட்களைக்கூட ஓரம் தள்ளிவிட்டு ஒரு 25 பேர் செல்போனைக் கையில் வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறேன் சார் என்று நடக்கவே விடாமல் செய்வது எப்படி நியாயமாக இருக்கும்?

உங்களைப் படம் எடுக்கிறேன் சார் என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டீர்களா? விஐபி என்பவன் நாம சொன்னபடி கேக்கணும், நில்லுனா நிக்கணும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்? எத்தனையோ ஆயிரம் பேருடன் ஏர்போர்ட்டிலும் திருமண விழாக்களிலும் செல்போனில் போஸ் கொடுத்திருக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா?.

நான் புத்தன் என்று சொல்லிக் கொள்ளவில்லை. நானும் மனிதன்தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர்கள் வாழ்க்கையில் ஹீரோதான். அதே சமயம் அடுத்தவர்களை எந்த அளவுக்கு நாம் துன்புறுத்துகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.