33 சதவீத பணியாளர்களோடு இன்றும் நாளையும் வங்கிகள் இயங்கும்!

சற்றுமுன் தமிழகம் வணிகம்
SBI bank atm

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 1000 – த்தை கடந்துள்ளது. குறிப்பாக இதன் பாதிப்பு சென்னை , இதனை அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு , காஞ்சிபுரம் , திருவள்ளூர் பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருந்தது.

இதனை கட்டுப்படுத்த கடந்த 19-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்த பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வங்கி சேவைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந்தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இதன்படி இன்றும், நாளையும் வங்கிகள் குறைவான பணியாளர்களோடு செயல்பட உள்ளன. 10 நாட்களுக்கு பின்னர் வங்கிகள் திறக்கப்பட உள்ளதால், பல்வேறு பரிவர்த்தணைகளுக்காக பொதுமக்கள் படையெடுப்பார்கள் என்று தெரிகிறது. இதை எதிர்கொள்ள வங்கி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.