கொரோனா முகாமில் இருந்து தப்பித்தவரை… வலைவீசித் தேடிக் கண்டுபிடித்து…

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai road
madurai road

மதுரை, சோழவந்தான் அருகே தப்பிவந்த கொரோனா நோயாளி சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்து முகாமில் ஒப்படைத்தனர்.

சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கஜேந்திரன் 18 இவர் குஜராத் மாநிலத்தில் முறுக்கு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

வரும் வழியில் இவருக்கு கொரனோ பரிசோதனை செய்தனர் இதனால் கஜேந்திரனை உசிலம்பட்டி முகாமில் தங்க வைத்திருந்தனர்  பரிசோதனைக்கு பின்னர் இவர் யாரிடமும் சொல்லாமல் முகாமை விட்டு வெளியே வந்துவிட்டார் சோதனையில் இவருக்கு கொரோனோ தொற்று நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டது.

கஜேந்திரன் கொடுத்து விலாசத்தில் சுகாதாரத் துறையினர் சென்றனர் அங்கு கஜேந்திரன் இல்லாததால் கஜேந்திரனை  வலைவீசி தேடி வந்தனர் அக்கம்பக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதில் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்திற்கு கஜேந்திரன் வந்திருப்பதாக தகவல் கிடைத்து சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உட்பட  பணியாளர்கள் அங்கே நேரடியாகச் சென்று கஜேந்திரனை அழைத்துவந்து மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு உட்கார வைத்திருந்தனர்

ஆம்புலன்ஸ்  காலதாமதமாக வந்தது  பின்னர் கஜேந்திரன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த நோயாளி களும் மருந்து மாத்திரை வாங்க வந்த நோயாளிகளும் தங்களுக்கு தொற்றுநோய் பரவிடுமோ என்ற அச்சத்தில் சுகாதார நிலையத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.