சிறப்பு ரயில்கள் ரத்து: மதுரை மண்டல மேலாளர் அறிவிப்பு!

பொது தகவல்கள் மதுரை லைஃப் ஸ்டைல்
kolkatta train
kolkatta train

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 31.7.2020 வரை ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களின் சேவையும் 15.7.2020 வரை ரத்து செய்யப்பட்டது.

ஊரடங்கை முழுமையாகச் செயல்படுத்த ரயில் போக்குவரத்தை 31.7.2020 வரை நிறுத்த தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி 16.7.2020 முதல் 31.7.2020 வரை வண்டி எண் 02636/02635 மதுரை – விழுப்புரம் – மதுரை சிறப்பு ரயில்கள் மற்றும் வண்டி எண் 02627/02628 திருச்சி – நாகர்கோவில் – திருச்சி சிறப்பு ரயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

இதே போல கோவை – காட்பாடி, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களும் 31.7.2020 வரை ரத்து செய்யப்படுகின்றன என தென்னக ரயில்வேயின் மதுரை மண்டல மேலாளர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.