பாசப் போராட்டத்தில் தவித்த காளையும் பசுவும்! ஒன்றுசேர்த்த ஓபிஎஸ்., மகன்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
palamedu-jallikattu-kaalai
palamedu-jallikattu-kaalai

மதுரை பாலமேட்டில் பாசப் போராட்டத்தில் பிரிந்து தவித்த காளை மற்றும் பசுவை ஒன்று சேர்த்து வைத்த ஓபி.எஸ் மகன்!

மதுரை பாலமேட்டை சேர்ந்த முனியாண்டியின் பசுவும், அங்குள்ள மஞ்சமலைக்கோவில் காளையும் காதலோடும், பாசத்தோடும் பல மாதங்களாக பழகி வந்தன. இந்த நிலையில் கொரோனா காரணமாக வறுமையில் வாடி வந்த முனியாண்டி, அலங்காநல்லூரை சேரந்த மணிகண்டனுக்கு தன் பசுவை விற்பனை செய்தார்.

தொடரந்து பசுவை அழைத்துச் சென்ற வேனை மறித்த காளை, பசுவை பிரிய மனமில்லாமல் அங்கும், இங்குமாக ஓடித் தவித்தது. இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வளலதளங்கள் மூலம் பரப்பினர்.

மேலும் மஞ்சமலை காளை, பசுவை பிரிந்த சோகத்தில் 2 நாட்களாக உணவு எடுத்து கொள்ளாமல் வேதனையோடு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், தன் இளையமகன் பிரதீப் மூலம், பிரிந்து சென்ற பசுவை மீண்டும் விலை கொடுத்து வாங்கி மாலை, மரியாதை செய்து எம்எல்ஏ மாணிக்கம் முன்னிலையில் இன்று பாலமேடு கிராம கமிட்டியிடம் ஒப்படைத்தார்.

இதன் மூலம் பாசப் போராட்டத்தில் பிரிந்து தவித்த காளையும், பசுவும் மீண்டும் இணைந்தன. பின்னர் காளையையும், பசுவையும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் கைதட்டி அழைத்துச் சென்றனர்.

  • ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.