ஈஸியா செய்யலாம் சேமியா கொழுக்கட்டை!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
semiya-kozukattai

சேமியா கொழுக்கட்டை

தேவையானவை:
சேமியா – 200 கிராம்,
தேங்காய் – ஒன்று (துருவிக் கொள்ளவும்),
காய்ச்சிய பால் – 2 கப்,
அரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது),
கடுகு, சீரகம், எள் – தலா அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிள காய் ஆகியவற்றை வதக்கவும்.

தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.