பட்டென்று செய்ய பழக்கலவை பாயாசம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mixed fruit payasam
mixed fruit payasam

பழக்கலவை பாயாசம்
தேவையான பொருட்கள்:

பால் – 1/2 லிட்டர்
மாம்பழம் – 7 துண்டுகள்
பலாப்பழம் – 7 துண்டுகள்
அன்னாசி பழம் – 7 துண்டுகள்
பேரிச்சம்பழம் – 7
செர்ரி பழம் – 7
மாதுளை – ஒரு கைப்பிடி
சீனி – 1/2 கப்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2
மில்க் மெய்டு – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – 4
பாதாம்பருப்பு – 4

செய்முறை விளக்கம்:

பாலை நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். பழங்களை சிறிது சிறிதாக வெட்டி பாலோடு சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வேக விடவும். பிறகு சீனி சேர்க்கவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து இதனோடு சேர்க்கவும். கடைசியில் மில்க் மெய்டு சேர்த்து ஏலக்காய் தூவி இறக்கவும். கடைசியில் பாதாம் பருப்பை நீளவாக்கில் சிறிது சிறிதாக வெட்டி சேர்க்கவும். சுவையான பழ கலவை பாயசம் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.