தன்னால் முடியாத நிலையில், பக்கத்து வீட்டுக்காரனை தன் மனைவியுடன் சேர வைத்தும் குழந்தை பிறக்கவில்லை… கணவன் எடுத்த முடிவு!

Published:

couple
couple

இந்த அரிய வழக்கைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால் .. உலகில் இதுபோன்றவர்கள் இருக்கிறார்களா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

தற்போது பொதுவாக குழந்தைகளைப் பெற பல வழிகள் உள்ளன. இயற்கையாக அமையாத பட்சத்தில்… பெரும்பாலான குழந்தைகள் ஐவிஎஃப் நடைமுறை மூலம் பெற்றெடுக்க ப்படுகின்றன.

இருப்பினும், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் குழந்தையைப் பெற்றெடுக்க பக்கத்து வீட்டு மனிதரை நம்பியிருந்தார். ஆனால், பலன் கிட்டவில்லை. பின்னர் கணவர் நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார்.

29 – வயது டெமெட்ரியஸ் சௌபோலஸ் என்பவர் முன்னாள் அழகு ராணி ட்ரௌட்டே யை காதலித்து மணந்தார். அவர்களின் வாழ்க்கை மிகவும் அன்னியோன்யமாக கழிந்துது. ஆனால், குழந்தை பிறக்காமையால் அவர்கள் வருத்தம் கொண்டனர். எத்தனை மருத்துவமனைகளுக்குச் சென்றாலும், பலன் கிடைக்கவில்லை. கணவரான சௌபோலசுக்கு குழந்தைகளைப் பெறுவது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

இதன் மூலம், அவர் .. எதிர்பாராத முடிவை எடுத்தார். இது குறித்து மனைவி ட்ரௌட்டே யிடம் கூறினார். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. நமக்கு குழந்தைகள் வேண்டுமென்றால் நீ இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அதற்கு அவள் உடன்பட வேண்டி வந்தது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அவர் என்ன முடிவு எடுத்தார் தெரியுமா? பக்கத்து வீட்டில் வசிக்கும் 34 வயதான ஃபிராங்க் மாவுஸுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், அவர் மூலமாக குழந்தைகளைப் பெற விரும்புவதாகவும் அவர் தனது மனைவியிடம் கூறினார். ஏனென்றால் அவருக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளனர் … நிச்சயமாக அவருக்கு குழந்தைகளைப் பெறும் திறன் உள்ளது. ட்ரௌட்டே வும் ஒப்புக்கொண்டார்.

கணவர் சௌபோலஸ் இது குறித்து அடுத்தவீட்டு மாவுஸிடம் கூறினார். முதலில் அவர் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், இதை இலவசமாகச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கணவர் வற்புறுத்தினார். மாவுஸும் ஒப்புக்கொண்டார். இதற்காக, அவர் அந்த கணவருடன், 2,500 டாலருக்கு (ரூ. 1,86,551) க்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆறு மாதங்களுக்குள் தனது மனைவியை கர்ப்பமாக்க வேண்டும் என்று கணவர் ஒப்பந்தத்தில் தெரிவித்தார். அந்த நபர் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்டார். ஒப்பந்தத்தின்படி, இந்த சடங்கு வாரத்தில் மூன்று இரவுகள் நீடித்தது.

ஆறு மாதங்கள் கழித்தும் அவள் கர்ப்பமாகவில்லை. அதற்காக அவர் 72 முறை முயற்சி செய்துள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக மாவுஸை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். இந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் அதிர்ச்சியூட்டும் மற்றொரு விஷயத்தை கூறினார். அந்த மனிதருக்கும் குழந்தைப் பிறப்புக்கான தன்மை இல்லை என்றும், குழந்தைகளைப் பெறுவது கடினம் என்றும் கூறினார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதைக் கேட்ட அந்த கணவருக்கு தலை சுற்றியது. “ஆறு மாதங்கள் .. 72 முறை …” அவர் பெருமூச்சுவிட்டு வீட்டிற்கு சென்றார். இது குறித்து மனைவியிடம் கூறி கோபமடைந்தார்.

அடுத்த வீட்டுக்காரனுக்கு உள்ள இரண்டு குழந்தைகளின் தந்தை யார் என்று அவரது மனைவியிடம் கேட்டபோது, ​​குழந்தைகள் அவருடைய குழந்தைகள் அல்ல என்று கூறினார்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஒப்பந்தத்தின்படி அவர் தனது மனைவியை கருத்தரிக்க முடியவில்லை ஆதலால் பணத்தைத் திரும்பக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த மாவுஸ், குழந்தைகள் பிறக்கும் என்று நான் உத்தரவாதம் அளிக்கவில்லை, எனவே நான் பணத்தை திருப்பித் தர வேண்டியதில்லை என்றார்.

வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2019 அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் இன்னும் வைரலாகி வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img