
இணைய உலகத்தை பொறுத்தவரையில் ஒரே நாளில் யார் வேண்டுமானாலும் பிரபலமாகி விடலாம்! நேர்மறையோ, எதிர்மறையோ எத்தனையோ பேரை இணைய உலகம் வெளி உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.
வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காக செய்யப்படும் ‘டிக் டாக்’ வீடியோக்கள் என இணையத்தில் எப்போது எதுவெல்லாம் புகழடையும் என்று சொல்வதற்கில்லை.
அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் சர்ரென்று வைரலாகி விடுகிறது. ‘அடிக்காம திட்டாம குணமா வாய்ல சொல்லனும்’, ‘அப்போ நான் பாசம் இல்லையா’, ‘பொய்யு பொய்யு எல்லாம் பொய்யு’ இது மாதிரி ட்ரெண்டிங் குழந்தைகளின் வசனங்கள் 2018ல் டாப் இடங்களைப் பிடித்தன.
2018 ஆம் ஆண்டின் கடைசியில் க்யூட் வசனங்கள் ரேஸில் இடம்பிடித்துள்ளது, இன்னொரு சுட்டியின் வீடியோ!
ஒரு சுட்டிச் சிறுவனிடம் உறவினர் விளையாட்டாக ”இனிமே இளைஞர் அணி சங்கத்தில நீ சேர்ந்துட்ட… சரியா! என்று சொல்ல, அந்தச் சிறுவனும் தலையை ஆட்டுகிறான்.
பின்னர், இப்போ போய் ஒரு 2 ஆயிரம் உங்கம்மா கிட்ட வாங்கிட்டு வா… சரியா… என்று கேட்க, அந்தச் சிறுவனும் தலையை ஆட்டுகிறான்…
போய்ட்டு வருவியா மாட்டியா என்று கேட்க… சாப்பிட்டு வாரேன்..என்கிறான்.
சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்று அவர் கேட்க… சிறுவன்… சாப்பாடுதான் முக்கியம் என்கிறான்…
சங்கத்துல உறுப்பினர் நீ… சாப்பாடுதான் முக்கியமா? என்று அதட்டிக் கேட்க…
அந்தச் சிறுவன்… அப்போ ‘எனக்கு பசிக்கும்ல… சாப்பிடக்கூடாதா” என்று முகத்தை சீரியஸாக்கி அழத் தொடங்குகிறான்… இரு நாட்களாக இந்தச் சிறுவனின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்



