ராமர் கோயிலுக்கு தங்கச் செங்கல் அளிப்பதாக… மொகலாய அரச வாரிசு மீண்டும் அறிவிப்பு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hafidutheen - 2026

அயோத்தி ராமர் கோவிலுக்கு தங்கச் செங்கல் பரிசளிக்கப் போவதாக கூறிய மொகலாய அரச பரம்பரை வாரிசு மீண்டும் அதனை உறுதிப் படுத்திக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அயோத்தியில் கட்டப்போகும் ராமர் கோவிலுக்கு தங்கத்தாலான செங்கல் பரிசாக அளிக்கப் போகிறேன் என்று முகலாயச் சக்கரவர்த்தியின் வாரிசு என்று தன்னை அறிவித்துக் கொண்டிருந்த பிரின்ஸ் யாக்கோபு ஹபீதுத்தீன் டூசி இப்போது மீண்டும் அறிவித்துள்ளார்.

ஒரு கிலோ எடையுள்ள தங்க செங்கல்லை பிரதமருக்கு அளிப்பேன் என்றும் அதனை கோவில் நிர்மாணத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இது 100 கோடி ஹிந்துக்களின் மன உணர்வையும் நம்பிக்கையையும் மதிக்கும் நேரம் என்றார் அவர்.

இந்த நேரத்தில் இந்துக்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்றும் பிரதமரை சந்திப்பதற்கு நேரம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியதாக தெரிகிறது.

முன்னதாக, ஹஜீதுத்தீன் டூசி பாபர் மசூதியின் கேர் டேக்கராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.