ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு அரசுடையானது; அரசிதழில் வெளியீடு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
poes garden - 2026

ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது.

அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டது. ஜெயலலிதா இல்லத்தில் 4 கிலோ தங்கம் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசுடமையாக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நான்கு கிலோ 372 கிராம் தங்கம் உள்ளது. போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கியதற்கான தகவல் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது. இதில், 601 கிலோ வெள்ளி பொருட்கள் உள்பட மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி, 11 டிவி,10 பிரிட்ஜ் ஆகியவை உள்ளன என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

jayalalitha vedha house - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.