மாணவி அனிதா உடலுக்கு கட்சித் தலைவர்கள் மரியாதை

உள்ளூர் செய்திகள் திருச்சி

அரியலூர் :

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போன காரணத்தால், தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால் ப்ளஸ் 2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் சீட் கிடைக்காத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா வெள்ளிக்கிழமை நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், தி.மு.க.,.வை சேர்ந்த திருச்சி சிவா, ராசா, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என் ஆர்.தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , அ.திமு.க., அம்மா அணியை சேர்ந்த தினகரன் , எம்.எல்.ஏ., பால பாரதி , முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன், மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்காந்தி, லோக் ஜனசக்தி மாநில தலைவர் விஜயதரன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன், திண்டுக்கலை சேர்ந்த பட்டிமன்ற பேச்சாளர் லியோனி, தமிழர் நல பேரவை மாநில தலைவர் பாலகிருஷ்ணன், காங்.,கட்சியை சேர்ந்த செல்வப்பெருந்தகை , விவசாய சங்கத்தை சேர்ந்த பி.ஆர்.பாண்டியன், அனைத்து இந்திய தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியை சேர்ந்த பொது செயலாளர் அண்ணாமலை மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த இயக்குனர்கள் ரஞ்சித், பாண்டிராஜ் களஞ்சியம், கவுதமன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அனிதா உருவப்படம் அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், மாணவி அனிதா உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைப்படத் துறையினர் நேரில் அஞ்சலி செலுத்த வந்துள்ளதால், அரியலூர் மாவட்டம் குழுமூரில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.