தமிழகத்தில் கொரோனா புதிய உச்சம்: ஒரே நாளில் 2865 பேருக்கு தொற்று உறுதி!

Published:

corona worldwide
corona worldwide

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 45,814 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து  மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம்,  தமிழகத்தில் ஒரே நாளில் 2,424 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 37,763 பேர் குணமடைந்துள்ளனர்.

covidjuna
covidjuna

தமிழகத்தில் இன்று 2865 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து,  8ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று 67,000ஐக் கடந்துள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 45,000ஐக்  கடந்துள்ளது.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 33 பேர்   உயிரிழந்துள்ளனர்  இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா   உயிரிழப்பு எண்ணிக்கை 866ஆக   அதிகரித்துள்ளது

 அதேநேரம்கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37,763ஆக   உயர்ந்துள்ளது வெளி நாடுகள், மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 91 பேருக்கு கொரோனா

குவைத்திலிருந்து விமானம் மூலம் வந்த 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது கத்தார், சவுதி, சிங்கப்பூரிலிருந்து வந்த 10 பேருக்கும் நைஜீரியா, மலேசியா, அரபு அமீரகத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது

covidjunc
covidjunc

செங்கல்பட்டு மாவட்டத்தில் 131 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. திருவள்ளூர்   மாவட்டத்தில் 87 பேருக்கு இன்று கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 66 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

covidjunb
covidjunb

Related articles

Recent articles

spot_img