இனி வெயிட் போட்டவங்க எல்லாம் இளைக்கலாம்: ஆக்ஸ்ட் 10 முதல் ஜிம் திறக்க அனுமதி!

சற்றுமுன் தமிழகம்
gym - 2026

தமிழகத்தில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்களை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளார். 50 வயதிற்கு அதிகமான நபர்களை ஜிமிற்குள் அனுமதி செய்ய கூடாது என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக கொரோனா ஊரடங்கு அமலான நிலையில், ஜிம்கள் மூடப்பட்டது. ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வுகளில் மத்திய அரசு ஜிம்களை 5 ஆம் தேதி திறக்க அனுமதி வழங்கியது.

ஆனால், தமிழகத்தை பொறுத்த வரையில் ஜிம்களை திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஜிம்களை திறக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், தமிழக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.