இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோமாதா பூஜை வழிபாடு!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
htk-rama-ravikumar
htk-rama-ravikumar

இந்து தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் விவசாயிகள் நினைவு சங்கம் இடத்தில் “கோமாதா பூஜை வழிபாடு” நடைபெற்றது.

இந்து தமிழர் கட்சி சார்பில் நிறுவன தலைவர்
திரு ராம ரவிக்குமார் அவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வேல் வழிபாடு செய்து கூட்டுப் பிரார்த்தனை கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.

கன்றுடன் கூடிய பசு அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பூஜையில் இறை அன்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இன்றைய வழிபாட்டில் அரசாங்கத்திற்கு பிரார்த்தனைகள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்.

1.ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்ல நாளில் கோமாதா பூஜை நடைபெற்றது. பசு இனத்தை பாதுகாக்க பசுகொலைகள் தடுக்க ; பசு கடத்தல் தடுக்க; பசுவதை தடை சட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.

2.அயோத்தியில் சட்ட சமரச தீர்வு ஏற்பட்டதன் அடிப்படையில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்படுகிறது.
அது போல ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்ட தேவையான நடவடிக்கையை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும்.

3.ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை “தேசிய குழந்தைகள் தினமாக” அறிவிக்க வேண்டும்.

04.ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் நாட்டு பசு இனங்களை பாதுகாக்க கோ சாலைகள் அமைக்க வேண்டும்.

05.தமிழக அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு சிரமத்தை குறைக்க தமிழ்நாட்டிற்கு உள்ளாக பயணப்பட தனியார் வாகனங்களுக்கு E.PASS முறையை ரத்து செய்ய வேண்டும்.

06.திமுக இருமொழிக் கொள்கை என்கின்ற அடிப்படையில் தமிழக மாணவர்கள் பிற மொழிகள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தடுப்பது தமிழ் இன விரோதம்.

இந்தி மொழி வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்கள் திமுகவினர் நடத்தக்கூடிய பள்ளி கல்லூரிகளில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்களா? இல்லையா? ஸ்டாலின் மருமகள் நடத்தக்கூடிய சன்சைன் பள்ளிக்கூடத்தில் இந்தி மொழி இருக்கிறதா இல்லையா?

07.ரூபாய் 10 ஆயிரம் வருமானம் உள்ள கோவில்களை திறக்க அரசு அனுமதித்திருக்கிறது. இந்து தமிழர் கட்சி சார்பில் வரவேற்கிறோம். அதே போல அனைத்து திருக்கோயில்களையும் திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தந்து ஏற்பாடு செய்ய வேண்டும்.

08.நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மீக அரசியல் என்று சொல்கிறார். அதே நேரத்தில் அரசியலில் தவறுகளை துணிச்சலாக தட்டிக்கேட்ட நடிகர் அஜித் அவர்கள் மக்களுக்கு உதவக்கூடிய, பகட்டில்லாத, எளிய நடிகர். பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர வாய்ப்பு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.