
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
நெல்லை மாவட்டம் தென்காசி குற்றாலம் செங்கோட்டை கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது இடைவிடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

குறிப்பாக குற்றால அருவிக்கு நீர்வரத்து வரக்கூடிய நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
இதையடுத்து திருக்குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் போலீசார் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர்



