அப்துல் கலாம் பிறந்த நாள்: கோயில் கட்டி வழிபாடு!

Published:

IMG 20191015 WA0016 - 2026

ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்கட்டி தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர் இளைஞர்கள்.

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன், திருச்சி தூய வளனார் கல்லூரியில் படித்தவர்.

1999ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கியப் பங்காற்றியவர். 2015 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் ஷில்லாங்கில் உள்ள கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து மறைந்தார்.

IMG 20191015 WA0015 - 2026

உயிர் பிரியும் தருவாயிலும் மாணவர்களிடம் உரையாற்றினார்.
இளைஞர்களின் கனவு நாயகனாக திகழும் அப்துல்கலாமிற்கு திருச்சியில் சூரிய மின்சாரம் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வரும் புஷ்பராஜ் ஏபிஜே அப்துல் கலாமிற்கு தனது அலுவலகம் முன்பு 2016 ஆம் ஆண்டு மார்பளவு சிலை வைத்து கலாம் 2020 கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே ( இலட்சிய) கனவு என கல்வெட்டு அமைத்து கோவில் கட்டி வழிபாடு செய்துவருகிறார்.

ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களுக்கு வழிபாடு செய்து கனவு நாயகன் கனவு நிஜமாகும் வரை அனைவரும் உழைப்போம் என உறுதி ஏற்றார்கள் .

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

நிகழ்ச்சியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் , உதயகுமார், வீரமணி, நாகராஜ், ஜெசி , அமர், மாதேஷ், கவிராஜ், பிரகாஷ், சண்முகப்ரியா உட்பட பலர் பங்கேற்றார்கள்.

Related articles

Recent articles

spot_img