
நெல்லை, தென்காசி பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது நெல்லை, தூத்துக்குடி மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையின் காரணமாக இன்று (15.10.19.) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டார்
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கனமழை மீண்டும் தொடங்கியது மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்

அதிகாலை 6. மணியில் இருந்து கடையநல்லூர் ,தென்காசி , குற்றாலாம் , பாவூர்சத்திரம் செங்கோட்டை பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆகவே தென்காசி கல்வி மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்தது
இதையடுத்து தென்காசி கல்வி மாவட்டத்துக்கு மட்டும் இன்று பள்ளி- கல்லூரிகள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மழையில் நனைந்து கொண்டு பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதை படமெடுக்க பத்திரிகைகளின் புகைப்பட நிருபர்கள் காலையிலேயே புறப்பட்டனர்
தென்காசியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து காயமடைந்த ஆறுமுகத்தம்மாள் என்பவர் படுகாயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்்



