குப்பைமேட்டில் மதுபான விற்பனை! 920 பாட்டில்கள் பறிமுதல்!

சற்றுமுன் மதுரை
liquor-bottle-sales
liquor-bottle-sales

குப்பை மேட்டில் வைத்து மதுபானம் விற்பனை செய்த நபர் கைது 920 மதுபான பாட்டில்கள் பறிமுதல்

சுதந்திர தின விழா மற்றும் முழு ஊரடங்கு காரணமாக சனி, ஞாயிறு மதுபானக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் விற்பனை செய்வது மதுரை மாவட்டம் முழுவதும் அதிகரித்து உள்ளது.

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே கல்லுமேடு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான பாட்டில் விற்பனை செய்வதாக சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சிலைமான் காவல்துறையினர் கல்லுமேடு பகுதியில் சோதனை செய்தனர் அப்போது போஸ்வயது 67 என்பவர் குப்பை மேட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சிலைமான் காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில் விற்பனை செய்த போஸ்யை கைது செய்து குப்பைமேட்டில் பதுக்கி வைத்திருந்த 920 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  • செய்தி ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.