கண்மாய்களை குப்பைத் தொட்டி ஆக்கும் அவலம்! நடவடிக்கை எப்போது?!

புகார் பெட்டி மதுரை
picture-tubes-in-river-belt-maduri
picture-tubes-in-river-belt-maduri

மதுரையில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகள்… கண்மாய்களைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்! நடவடிக்கை எடுக்குமா?

மதுரை மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தியார்குண்டு கண்மாயில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகிறார்கள் .

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. மேலும் இந்த கண்மாயில் தொடர்ந்து எலக்ட்ரானிக் கருவிகள் மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுவதால் விவசாய நிலங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வரும் இந்தக் கண்மாய் விஷத் தன்மை கொண்டதாக மாறி, நோய் தொற்று ஏற்படுத்தும் விதமாக மாறிக் கொண்டு வருகிறது .

இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை அப்பகுதி மக்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ,
அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் சிலர் எலக்ட்ரானிக் கருவிகளை, பழுதான டிவி பிக்சர் டியூப்களை அங்கே கொட்டி விட்டுச் சென்றுள்ளார்கள்.

இதுபோன்று குடிநீர் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுப்பார்களா?

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.