கனவின் விளைவு: இப்படி கண்டால் எதிர்பாராத சொத்து வரும்!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

கனவில் குடுகுடுப்பைக்காரர்களைக் கண்டால், ஆலோசிக்காமல் எக்காரியத்திலும் இறங்கக் கூடாது; எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை.

குடிசை ஒன்றில் தாம் வசிப்பதாகக் கனவு காணின், வறிய நிலையை அவர் அடைய நேரிடும் என்பதைக் குறிக்கும்.

குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு காணின், வீட்டில் களவு போகலாம்.

கனவில் குண்டூசி களைக் காணின், சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

குறட்டை விடுவது போல கனவு கண்டால், சுக வாழ்க்கை ஸித்திக்கும்.

கூச்சல் ஒலிக்கும் இடத்தில் இருப்பதுபோல கனவு கண்டால் உடல் நலம் கெடும். பலர் கூச்சலிட்டு தன்னை நோக்கிப் பேசுவதாக காண்பதும் கெடுதலானது.

:கூலி வேலை செய்பவர், தனக்குக் கொடுக்கப்பட்ட கூலி குறைக்கப்பட்டது போல கனவு காணின், அவருக்கு தற்போதைய வேலையைவிட பெரிய வேலை கிடைக்கக்கூடும்.

பிறர் நம்மை கேலி செய்வதுபோல கனவு கண்டால், தொழிலில் மேம்பாடு, உத்தியோகத்தில் உயர்வு, பொருள் சேர்க்கை உண்டாகும். மாறாக மற்றவர்களை, நாம் கேலி செய்வது போல கனவு கண்டால் பண நஷ்டம், உண்டாகும்.

:கைவளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் மங்கையர்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும்.

மணமானவர்கள் எனில், அவர்தம் கணவருக்கு வருமானம்
அதிகரிக்கும்.

கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால், எதிர்பாரா வகையில் பெரும் சொத்து வந்து சேரும். ஆனால், வளையல் உடைத்து விட்டாற்போல காண்பது கெடுதல்.

மரம் அல்லது பழத்தைக் காண்பது நல்லது. பழத்தை உண்பதுபோல காணின் நோய்கள் விலகும். தொழில் உயர்வு அடையும். உத்தியோக பதவியும் உயர்வடையும்.

இந்தக் கனவை விவசாயி ஒருவர் கண்டால், விளைச்சல் செழிக்கும். குழந்தைப் பேறு கிட்டாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும். மணமாகாதவர்களுக்கு மணம் நடைபெறும்.

தோன்றும்…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.