- டி.எஸ். வெங்கடேஷ்

ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு சுந்தர் “ இங்கு சினிமாவைப் பற்றி மட்டும்தான் நான் பேச வந்திருக்கிறேன் .அரசியல் பற்றி அல்ல. தமிழக அரசிற்கும் ,மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
மதுபானக் கடைகளை அனைத்து இடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி இருக்கிறீர்கள் . அதேபோல் திரையரங்குகளையும் 100 சதவீதம் பார்வையாளர்கள் பார்க்க அனுமதித்தால் சினிமா நல்லபடியாக வளர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் .
கொரோனா காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.” என முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் முடிவு செய்யும். இதைதான் நாங்கள் திரும்ப திரும்ப கூறி வருகிறோம். பாஜ தலைமையில்தான் கூட்டணி என்பதால் இது முக்கியமானது.
திருவல்லிக்கேணியில் பொறுப்பாளராக உள்ளதால் பணிகளை தொடங்கி செய்து வருகிறேன். வேட்பாளராக அறிவித்தால் நிற்பேன். இல்லை என்றால் பிரசாரதத்தில் ஈடுபடுவேன்.
ரஜினி தாமாகவே யாருடைய நிர்பந்தம் இன்றி முடிவெடுத்துள்ளார். உடல் நிலை காரணம் என அவரே கூறியுள்ளார். இதில் பாஜகவுக்கு தொடர்பில்லை.
லவ் ஜிகாத் சட்டம் பல மாநிலங்களில் சட்டமாக்கப்பட்டு வருகிறது. இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது இல்லை. இது கட்டாய மதமாற்றத்தை தடுக்க உதவும். மதம் அடிப்படை கிடையாது. “ என கூறினார்.
திரைப்பட இயக்குனர் டி சம்பத் குமார் பேசுகையில் “ இது எனது முதல் படம். முப்பதுக்கும் மேற்பட்ட புது முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். .இந்தப் படம் ஒரு பேயின் பேரன்பை சொல்லும் படம். பாலுமகேந்திரா அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒரு கதை அதற்கான கதாபாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார் . அதன்படிதான் இந்த படம் அமைந்துள்ளது.இந்த படம் ஒரு கதாநாயகியை மையப்படுத்திய படம். ” என்றார்.
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V சாய்பா்கபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பூ சுந்தர் பதமற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , செயலாளர் ,துணைத்தலைவர் ,பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்