
கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து, தே.ஜ.கூட்டணியின் தலைமை அறிவிக்கும் என்று கூறினார் நடிகையும்,பாஜக, பிரமுகருமான கௌதமி.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் நடிகை கௌதமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
இந்த தொகுதி பொறுப்பாளராக நியமனம் தலைமை செய்துள்ளது ஆகையால் , இந்த தொகுதியில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம் .
இந்த தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு இந்த தொகுதியின் வேட்பாளராக யார் என்று இன்றும் அறிவிக்க வில்லை யார் போட்டியிட்டாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம் .
அதிமுகவில் ஆளுமையான தலைவர்கள் இல்லை என, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது, ஒரு கட்சியின் தலைமையை பற்றி அந்த கட்சியின் தலைமை தான் பேச வேண்டும் மற்ற கட்சியினர் பேசக்கூடாது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. அதை எங்கள் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்… என்றார்.
எம்ஜிஆர் உடைய ஆட்சியை நான் அமைப்பேன் என கமலஹாசன் கூறுகிறார் .அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு அது அவருடைய தனிப்பட்ட கருத்து.
அதேபோல் தமிழகத்தில் மூன்றாவது அணியாக மக்கள் நீதி மையம் திகழும் என கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, நல்லது, அதுஅவருடைய கருத்து. பிஜேபி ஒரு தேசிய கட்சி தமிழ்நாட்டில் எத்தனையே தேர்தலில் பங்கேற்று உள்ளது இப்ப இருக்கிற கூட்டணியில் ஏற்கனவே ஒரு தேர்தலில் போட்டியிட்டு முடித்திருக்கிறோம் வரப் போகின்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும்… என்றார்.
மேலும், அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பேச்சுவார்த்தை எப்பொழுது இருக்கும் இந்த தொகுதிக்கு யார் வேட்பாளர்கள் என போட்டியிடுவார்கள் ஜெயிக்கணும் என்ற எண்ணத்தோடுதான் வேட்பாளர் நிறுத்துவார்கள் பேச்சுவார்த்தையும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது… பேச்சுவார்த்தை முடிந்தவுடன் கூட்டணி சார்பில் பிஜேபி சார்பில் வெளியிடப்படும்… எனக் கூறினார்.