ஆரோக்கிய சமையல்: திணை தேங்காய்ப்பால் புலாவ்!

Published:

thinai-thenkai-pal-pulav

திணை – தேங்காய்ப்பால் புலாவ்

தேவையானவை:

திணை அரிசி. – ஒரு கப்
தேங்காய். – அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தண்ணீர். – ஒரு கப்
பச்சைப் பட்டாணி. – அரை கப்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

பட்டை. – 2
சோம்பு. – கால் டீஸ்பூன்
பிரியாணி இலை – ஒன்று
ஏலக்காய். – ஒன்று

செய்முறை:

திணை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, திணை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

திணை-தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

Related articles

Recent articles

spot_img