குடியிருப்பில் புகுந்த மரநாய்! மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
mara-nai
mara-nai

செங்கோட்டையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மரநாய் ஒன்றை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பம்பு ஹவுஸ் ரோட்டில் ஜெயா என்பவரது வீட்டில் மரநாய் ஒன்று பதுங்கி இருப்பதாக செங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் வந்தது.

mara-nai1
mara-nai1

இதனையடுத்து நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் மீட்பு பணி வீரர்கள் மாரியப்பன், சிவக்குமார், கோமதிசங்கர், வினுக்குமார் ஆகியோர் சம்ப இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் பதுங்கியிருந்த மரநாயை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.