கனவின் விளைவு: பட்டாம்பூச்சி பறந்தால்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
dream-1

எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள்.

சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும்.

சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கரப்பான்பூச்சியை கனவில் கண்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும்.

ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள்.

ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள்.

தேனீக்கள் தேன் கொண்டு வந்தாலும், கூட்டை கட்டுவது போல கனவு கண்டாலும் நல்லது நடக்கும்.

தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

பட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே சென்றால் பண பற்றாக்குறை ஏற்படும்.

வெட்டுக்கிளி கனவில் வந்தால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும்.

பச்சை வெட்டுக்கிளியை கனவில் வயலில் காண்பது மிகவும் நல்லது.

தோன்றும்……..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.