2 அடி விலகியிரு என்ற மந்திரத்தை கிராமங்கள் வழங்கியிருக்கின்றன!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
PM Modi discussion with panchayat sarpanch

சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கியிருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்…

கொரோனா வைரஸ் பரவல் அனைவருக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. நாம் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்று கற்பித்திருக்கிறது. கோரோனா வைரஸ் பரவல் நாம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றிவிட்டது.

நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா பரவல் சுட்டிக்காட்டி உள்ளது. கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கு, சமூக விலகல் என்பதை எளிமையாக வரையறுக்க, ‘2 அடி விலகியிரு’ என்ற மந்திரத்தை கிராமங்கள் நமக்கு வழங்கி உள்ளன.

தனி நபர் இடைவெளி மூலம் இந்தியா கொரோனாவை எப்படி கட்டுப் படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது என்று அவர் பேசினார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.