முந்திரி வெந்தயக்கீரை மசாலா

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
venthayakkirai
venthayakkirai

முந்திரி – வெந்தயக்கீரை மசாலா

தேவையானவை:

வறுத்த முந்திரி (இரண்டாக உடைத்தது) – 50 கிராம்,
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை – 2 கப்,
தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்),
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
பூண்டு – 2 பல்,
தோல் சீவித் துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
கசகசா – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
லவங்கம் – 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு சிட்டிகை,
சீரகம் – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

சின்ன குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம், பட்டை, லவங்கம், கசகசா, தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். இதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியபின் விழுதாக அரைக்கவும். பிறகு, அதே குக்கரில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சுத்தம் செய்த வெந்தயக்கீரையைப் போட்டு வதக்கவும். பாதி வதங்கிய பின் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு இறக்கவும். மேலே முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.