கொரோனா சோதனைக்காக… மதுரை அர்ச்சகர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றார்கள்… கொட்டித் தீர்த்தது கனமழை!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai battars
சுட்டெரிக்கும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி… கொரோனா சோதனைக்காக தாங்களாகவே வந்து நின்ற மதுரை கோயில் அர்ச்சகர்கள்…

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள் கொரோனா சோதனைக்காக, தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள தாமாக வந்து, வரிசையாக நின்றார்கள்.. அதுவும் சுட்டெரிக்கும் நட்ட நடு வெய்யிலில் கால்களில் செருப்புக் கூட இல்லாமல்! இந்நிலையில் மதுரையில் கன மழை பெய்து வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகருக்கு கொரோனா என்று ஊடகங்களில் பொய்யாக செய்திகளைப் போட்டு பரபரப்பை ஏற்படுத்திய போதும், எந்த அர்ச்சகரும் ஓடி ஒளியவில்லை. யாரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யவில்லை.

மோடியை முதலில் பரிசோதனை பண்ணுங்க என்று கூவவில்லை.. செல்ஃபி வீடியோ எடுத்து ஹிந்துக்களையோ / அர்ச்சகர் சமுதாயத்தையோ துணைக்கு அழைக்கவில்லை. அவர்களை ஹிந்துக்கள் என்று அடையாளப்படுத்தாதீர்கள் என்று
யாரும் அரசியல் செய்யவில்லை. மீனாட்சி அம்மன் கோவில் பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று பொங்கவில்லை.

அவர்களாகவே வந்து பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மருத்துவர்களுக்கு மரியாதை கொடுக்கிறார்கள்.. ஏனெனில் இந்த நாடு நமது நாடு. இந்த மக்கள் நம் சொந்த மக்கள்.

நமக்கு இது அந்நிய தேசமில்லை என்ற எண்ணத்தில், சுயமாக பரிசோதனைக்கு முன்வந்து நின்றார்கள்,,அதுவும் அரசு விதித்த சமூக இடைவெளியைக் கடைப்பிடித்த படி. நாடு நமது, சட்டம் நமக்கானது என்ற நம்பிக்கையுடன் கால்களில் செருப்புக் கூட அணியாமல் சுட்டெரிக்கும் வெய்யிலில் நின்று தங்களை சோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்கள்.

IMG 20200424 WA0018
மதுரையில் இன்று மாலை பெய்த கனமழையால் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகில் இருந்த மரம் சாய்ந்து விழுந்தது

இந்த நிலையில், இன்று மதுரையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது! இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது.

மதுரை நகரில் பரவலாக வெள்ளிக்கிழமை இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதைப் போக்கும் வகையில் வெள்ளிக்கிழமை மாலை 3…மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மழை வெளுத்து வாங்கியது.

மதுரை அண்ணாநகர், கோமதிபுரம், கே.கே.நகர், வண்டியூர், கருப்பாயூரணி பகுதிகளில், பலத்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இப் பகுதி மக்கள் பலர் குடங்களில் மழை நீரை பிடித்தனர். சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இருந்த போதிலும் பகல் நேரங்களிலும், இரவிலும் வெப்பம் மிகுந்து காணப்பட்டது.

மீனாட்சி தன் தொண்டர்களை, பக்தர்களை இழிவுபடுத்தியவர்களுக்கு பாடம் புகட்ட மழையாக கொட்டித் தீர்த்து விட்டாள் என்று இங்குள்ளவர்கள் கூறினர்.

  • செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

4 thoughts on “கொரோனா சோதனைக்காக… மதுரை அர்ச்சகர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றார்கள்… கொட்டித் தீர்த்தது கனமழை!”

  1. நியூஸை போடச்சொன்னா, இப்படியா பினாத்துரது. கோயில் உண்டியல்ல காசு வருதோ இல்லியோ, வேட்டி துண்டுல பல்க்கா முடிஞ்சுகிட்டு இருப்பானுங்க. எவனும் ஒரு நார்த் இந்தியன் வந்தா அம்மன் கழுத்துல இருந்து ஒரு மாலையை எடுத்து அவன் கழித்துல போட்டு மினிமம் 100 ஐ தேத்துறதுக்கு பேரு உண்மையான தொண்டனுங்களாம், இவனுங்களுக்கு மழை வேறையாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.