பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

உலகம் சற்றுமுன் சினிமா
satvik

ஹாலிவுட் திரையுலகில் கருப்பின மக்களின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்த பிளாக் பாந்தர் நாயகன் சட்விக் போஸ்மேன் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.

பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த 4 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் சட்விக் போஸ்மேன்.

இந்நிலையில் நடிகர் சட்விக் போஸ்மேன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி உலகளவில் உள்ள அவரது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவர் மார்வெல் யூனிவர்ஸின் பிளாக் பாந்தர் படத்தில் நடித்ததற்காக ஏகப்பட்ட விருதுகளை வாங்கியிருந்தார் . தொடர்ந்து சிறந்த கதாநாயகன் , சிறந்த நடிப்பு என இரு பிரிவுகளில் எம்.டிவி விருதுகளை தட்டிச் சென்றுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.