உச்சநீதிமன்ற கொலீஜியம் கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியாக கே. எம் ஜோசப் பெயரை பரிந்துரைக்க கொள்கை அளவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு பரிந்துரை அனுப்ப இன்றைய கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. உத்தரகண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே. எம். ஜோசப். உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப்பை கொலீஜியம் ஏற்கனவே பரிந்துரை செய்தது. கே. எம் ஜோசப் பெயரை பரிசீலிக்குமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியது.
முன்னதாக உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கோரி தலைமை தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மத்திய அரசுக்கு கடந்த ஜனவரியில் பரிந்துரை செய்தது. ஆனால் இதனை ஏற்காத மத்திய அரசு கே எம் ஜோசப் நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் மே-2 ம் தேதி மீண்டும் கூடிய கொலிஜியம் ஜோசப் பரிந்துரையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தற்போது கூடிய கூட்டத்திலும் முடிவு எடுக்கப்படவில்லை



