
அசோக் கஜபதி ராஜுவுக்கு கடினமான அவமரியாதை. ஸ்ரீராமர் விக்ரகத்தை புதிதாக தயாரிப்பதற்கு பெருமளவு தொகை அனுப்பினால் ஏற்காமல் திருப்பி அனுப்பி அவமரியாதை.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர், மத்திய முன்னாள் அமைச்சர் பூசபாட்டி அசோக் கஜபதி ராஜூவுக்கு மீண்டும் ஒருமுறை கோரமான அவமானம் நடந்துள்ளது.
விஜயநகரம் மாவட்டம் ராம தீர்த்தத்தில் அண்மையில் ஸ்ரீராமர் விக்ரகத்தை குண்டர்கள் துண்டித்த செய்தி தெரிந்ததே.
தெலுங்கு தேசம் கட்சியின் பொலிட்பீரோ மெம்பர் மத்திய முன்னாள் அமைச்சர் பூசபாட்டி அசோக் கஜபதி ராஜூ கோவிலில் புதிய விக்ரகம் தயார் செய்வதற்கு பெரிய அளவில் தொகை அனுப்பினார். ஆனால் அதிகாரிகள் அதனை ஏற்காமல் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து அசோக் கஜபதி ஆத்திரமடைந்தார்.

உண்மையில் ராம தீர்த்தம் கோவில் பரம்பரை தர்மகர்த்தாக்கள் அசோக் கஜபதி வம்சத்தினரே. குண்டர்கள் விக்ரகத்தை சேதப்படுத்தும் வரைகூட அசோக் கஜபதி ராஜூவே ஆலய தர்மகர்த்தாவாக இருந்தார். ஆனால் விக்ரகத்தை காப்பதில் அசோக் கஜபதி ராஜு தோல்வியடைந்தார் என்றுகூறி அவரை பதவியில் இருந்து நீக்கியது ஜகன் அரசாங்கம். ஸ்ரீராமர் விக்ரகம் மீண்டும் செய்வதற்காக அளித்த நன்கொடையை கூட ஏற்க மறுத்தது.
ராமதீர்த்தில் ஸ்ரீ ராமர் விக்ரகம் தயாரிப்பதற்காக அசோக் கஜபதி ராஜு ஒரு லட்சத்து 1116 ரூபாய் அனுப்பியதை அதிகாரிகள் ஏற்க மறுத்து அதிர்ச்சி அளித்தார்கள். இதுகுறித்து அசோக் கஜபதி அதிருப்தி தெரிவித்தார். பார்க்கப்போனால் பரம்பரை கோவில் தர்மகர்த்தா குடும்பத்தை தேவஸ்தானத்தில் இருந்து துரத்திவிடும் உத்தேசத்திலேயே இந்த அரசாங்கம் இருப்பதாக தோன்றுகிறது என்று விமர்சித்தார்.
இதுகுறித்து ஃபேஸ் புக்கில் சனிக்கிழமை ஒரு போஸ்ட் வெளியிட்டார்.
” முதலில் எனக்கு நோட்டீஸ் கூட அனுப்பாமல் எண்டோமென்ட் ஆக்ஷன் 28ஐ மீறி, என்னை பாரம்பரியமான தர்மகர்த்தா பதவியிலிருந்து நீக்கி விட்டார்கள். இப்போது கோவில் பரம்பரை தர்மகர்த்தா குடும்ப அங்கத்தினராக நான் ஸ்ரீராமருக்கு புது விக்கிரகம் தயாரிப்பதற்கு பக்தியோடு அளித்த காணிக்கையும் கூட ஏற்க மறுத்துள்ளார்கள். பார்க்கப்போனால் பரம்பரை வம்ச குடும்பத்தையே தேவஸ்தானத்தில் இருந்து விலக்கி வைக்கும் நோக்கத்தோடு இந்த அரசாங்கம் இருப்பதாக தெரிகிறது என்று அசோக் கஜபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அசோக் கஜபதி ஆதரவாளர்களும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களும் ஆத்திரம் அடைந்துள்ளார்கள்.