
குண்டூரில் கோவில் சிலைத் திருடன் பிடிபட்டான்.
குண்டூர் மாவட்டம் பட்டினம் பஜார் அருகில் ஜின்னாடவர் சென்டரில் உள்ள குசுமா ஹரிநாத சுவாமி கோவிலில் விக்ரகங்களைத் திருடிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
இதன்படி இந்த வழக்கு தொடர்பான விவரங்களை குண்டூரு அர்பன் எஸ்பி அம்மிரெட்டி செய்தியாளர்களிடம் விவரித்தார்… இன்று காலை குற்றவாளி குசும ஹரிநாதசுவாமி கோவிலுக்குள் நுழைந்து இரண்டு விக்ரகங்களை திருடினான்.
கோவில் நிர்வாகிகள் கொத்தபேட்டை டாணாவில் புகார் அளித்ததால் டிஎஸ்பி சித்தராமையா தலைமையில் போலீசார் எட்டு குழுக்களாக பிரிந்து குற்றவாளிக்காக தேடினார்கள். டெக்னாலஜி கருவிகளின் உதவியோடு பழைய குண்டூரில் உள்ள கட்டவாரி வீதியைச் சேர்ந்த போலிசெட்டி துர்கா இந்தத் திருட்டை செய்ததாக அடையாளம் கண்டார்கள்.
ஞாயிறன்று மதியம் பஸ்டாண்டு சென்டரில் அலைந்து கொண்டிருந்த துர்காவை போலீசார் கைது செய்தார்கள். அதன் பிறகு அவனிடமிருந்து இரண்டு விக்கிரங்களையும் கைப்பற்றினார்கள் என்று எஸ்பி தெரிவித்தார்.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வழக்கை கண்டறிந்த போலீசாரை அர்பன் எஸ்பி அம்மிரெட்டி பாராட்டினார். மேலும் குற்றவாளி மீது பழைய குண்டூரு டாணாவில் ஒரு திருட்டு வழக்கும் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணலங்க எல்லையில் பைண்டோவர் வழக்கும் இருப்பதாக எஸ்பி தெரிவித்தார்.