
ஒய் எஸ் ஷர்மிளாவின் கணவர் பிரதர் அனில் குறித்து பரபரப்பு விவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா சிஐடி அதிகாரிகள் அண்மையில் கைது செய்த பாஸ்டர் பிரவீண் சக்கரவர்த்திக்கு முதல்வர் ஒஎஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில்குமாரோடு தொடர்பு இருப்பதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் முன்னாள் உள்துறை அமைச்சர் சின்னராஜப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியின் கணவர் பிரதர் அனில் பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கோவில்களில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிஐடி அதிகாரிகள் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி என்ற பாஸ்டரை கைது செய்துள்ளார்கள். குண்டூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர் அளித்த புகாரின் படி பிரவீணை கைது செய்தார்கள்.
பிற மதத்தவர்களை இழிவுபடுத்தும் விதமாக யூடியூபில் வீடியோ போஸ்ட் செய்ததோடு கூட தானே இந்து கோயில் விக்ரகங்களை சிதைத்ததாகவும் சில இடங்களில் விக்கிரகங்களை காலால் உதைத்ததாகவும் வீடியோவில் கூறியுள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு போஸ்ட் செய்யப்பட்ட இந்த வீடியோ வைரலாக மாறியதால் போலீசார் அவரை கைது செய்தார்கள்.
ஆந்திர மாநிலத்தில் மத வேறுபாடுகளை தூண்டி விடுவதும் பிற மதங்களை மீது இழிவாக பிரச்சாரம் செய்வதோடு கூட அவற்றை சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வதுமான குற்றங்களால் பிரவீன் சக்கரவர்த்தியை அரெஸ்ட் செய்ததாக சிஐடி அடிஷனல் டிஜி சுனில் குமார் தெரிவித்தார்.

ஆயின், கோவில்கள் மீது நடக்கும் தாக்குதல்களின் பின்னால் அரசியல் கட்சிகள் உள்ளன என்று ஏபி டிஜிபி கௌதம் சவாங் அறிவித்தார். அதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் மற்றும் பிஜேபி தலைவர்களின் கைகள் உள்ளதாக கூறினார். 17 பேர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் நான்கு பிஜேபி தலைவர்களின் பங்கு இருப்பதாக டிஜிபி சவாங் தெளிவுபடுத்தினார்.
இதுவரை 13 பேர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களும் இரண்டு பிஜேபி தலைவர்களையும் கைது செய்துள்ளதாக டிஜிபி சவாங் குறிப்பிட்டார். மத வேறுபாடுகளை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வோம் என்று அவர் எச்சரித்தார். அதே சமயத்தில் ஆலயங்கள் மீது தாக்குதலில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மதங்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துபவர்கள் மீது கடினமாக நடவடிக்கைகள் எடுப்போம் என்று தெளிவுபடுத்தினார். சோஷியல் மீடியாவில் தவறாக பிரச்சாரம் செய்தால் கடின நடவடிக்கைகள் கட்டாயம் என்று எச்சரித்தார். மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் ஆலயங்களில் சிசி கேமராக்களை பொறுத்தி பாதுகாப்பளிப்போம் என்று அவர் தெரிவித்தார்.
டிஜிபி கூறிய செய்திகளின் மீது எதிர்க்கட்சிகளான தெலுங்குதேசம், பிஜேபி ஆத்திரம் அடைந்துள்ளன. ஆலயங்கள் மீது தாக்குதலின் பின்னால் பிஜேபி ஊழியர்கள் கூட உள்ளதாக கௌதம் சவாங் செய்த விமர்சனங்கள் மீது விவரங்கள் அளிக்காவிட்டால் அவர் மீது கிரிமினல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த வேண்டி வரும் என்றும் அதோடு மானநஷ்ட வழக்கு போட வேண்டிவரும் என்றும் பிஜேபி மாநில தலைவர் சோமு வீர்ராஜு விமரிசித்தார்.
மறுபுறம் ஏபி முன்னாள் உள்துறை அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சின்ன ராஜப்பா டிஜிபியின் நடைமுறையை பார்த்து ஆத்திரம் அடைந்தார்.
“முதல் நாள் சமுதாய எதிர்ப்பு சக்திகள் இதுபோல செய்து விட்டன என்றார்… அதன் பிறகு மறுநாள் டிஜிபி தன் பேச்சை மாற்றி தெலுங்கு தேசம் கட்சியும் பிஜேபி ஊழியர்களுமே தாக்குதல் செய்தார்கள் என்கிறார். பிரவீன் சக்ரவர்த்தி ஓராண்டுக்கு முன்பே வீடியோ போட்டபோது… இப்போது வழக்கு தொடுத்துள்ளார்கள்…
இதுவரை போலீசார் என்ன செய்தார்கள்? பிரவீன் சக்கரவர்த்திக்கும் முதல்வர் ஜெகனின் சகோதரியின் கணவரான பிரதர் அனிலுக்கும் தொடர்பு இருக்கிறது. அது எப்படிப்பட்ட தொடர்பு என்பதைக் கூற வேண்டும். அமைச்சர் கன்னபாபு மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளோடும் தொடர்புகள் உள்ளன. அவை என்ன தொடர்புகள்?
இவை அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு டிஜிபி தெலுங்கு தேசம் கட்சி, பிஜேபி கட்சி மீது மட்டுமே அனைத்து குற்றங்களையும் சுமத்தும் முயற்சி செய்கிறார். பிரதர் அனில் தொடர்பான விஷயத்தைக்கூட வெளியிடவேண்டும்.
சிஐடி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பிரவீன் சக்ரவர்த்தி யார்? எங்கிருந்து அவருக்கு நிதி கிடைக்கிறது? மத மாற்றங்களை வளர்த்து வருகிறீர்களா? இவை அனைத்தையும் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வற்புறுத்தினார்.