
அண்மையில் கேரளாவில் கொலைக்கு ஆளான அபயா கொலை வழக்கு விசாரணையில் அவர் முக்கிய பாத்திரம் வகித்தார். ஆண்டுக்கணக்காக போராடி குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்படி செய்தார்.
ஆந்திர முதல்வர் ஜெகனின் சொந்த சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு தீவிரமான பரபரப்பை ஏற்படுத்தியது . 2019 அசெம்பிளி தேர்தலுக்கு முன்பாக அவர் தன் வீட்டிலேயே கொடூரமான கொலைக்கு ஆளானார். ஆனால் இந்த வழக்கு விசாரணை மட்டும் முன்னேற்றம் அடையவில்லை. ஜெகன் முதல்வராக ஆன பின்பும் கூட இதுவரை குற்றவாளியை பிடிக்க வில்லை.
இதனால் ஜெகனின் சகோதரியும் விவேகானந்த ரெட்டியின் மகளுமான சுனிதா ரெட்டி பரபரப்பு தீர்மானம் எடுத்துள்ளார். தன் தந்தையின் வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்கு அவர் முக்கியமான முடிவோடு டெல்லி நோக்கி சென்றார். முதலில் இருந்தே தந்தையின் கொலை வழக்கு விஷயத்தை முழுமையாக பரிசீலித்து வரும் சுனிதா ரெட்டி அண்மையில் டெல்லியில் ஒரு பிரமுக உரிமைச் செயலர் ஜோமுன் புத்தென் புரக்கலை பிரத்தியேகமாக சந்தித்து பேசினார்.
கேரளாவில் கொலைக்காளான கிறிஸ்தவ சன்னியாசினி அபயா கொலை வழக்கை கண்டுபிடிப்பதில் ஜோமுன் முக்கியமாக பாத்திரம் வகித்தார். அந்த வழக்கில் போலீசாரும் சிபிஐயும் எத்தனை விதமாக தவறான வழியில் வழக்கை செலுத்தினாலும்… வழக்கு விசாரணையை ஆண்டுக்கணக்காக இழுத்தடித்தாலும்… குற்றவாளிக்கு தண்டனை விழும்படி செய்தார் ஜோமுன்.
20 ஆண்டுகளாகத் தொடர்ந்த வழக்கில் தனக்கேயான நடைமுறையோடு நியாயப் போராட்டம் செய்த ஜோமுன் இறுதியில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடினார்.
இதனால் டெல்லி சென்ற சுனிதா ரெட்டி பிரமுக உரிமைச் செயலர் ஜோமுனை பிரத்தியேகமாக சந்தித்து உரையாடினார். ஆனால் படிப்படியாக நடந்த இந்த பேட்டியில் அவர் ஜோமுனோடு பல விஷயங்களை சர்ச்சை செய்ததாகத் தெரிகிறது.
தன் தந்தை விவேகா கொலை வழக்கில் இப்போது வரை நடந்த பரிணாமங்களை அவருக்கு சுனிதா ரெட்டி விவரித்தார். வழக்கு விசாரணையில் உதவ வேண்டும் என்று வேண்டினார். அதற்கு ஜோமுன் கூட சரி என்றுள்ளார்.
அண்மையில் இந்த விஷயம் குறித்து மீடியாவோடு உரையாடிய ஜோமுன் விவேகா கொலை வழக்கு தொடர்பாக பரபரப்பு விமர்சனங்கள் செய்தார்.
விவேகா கொலைவழக்கில் தன்னிடம் முக்கியமான சாட்சி ஆதாரங்கள் உள்ளன என்றும் அவற்றை விரைவிலேயே வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார். இது நிச்சயம் கொலையே என்றும் இதில் சிலருடைய கை இருப்பதாக தனக்கு கச்சிதமாக சந்தேகம் உள்ளது என்றும் கூட அவர் விவரித்தார்.
திடீரென்று சுனிதா ரெட்டி எடுத்த இந்த முடிவு ஜகனுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.