
நிம்ஸ் மருத்துவமனையில் வாக்சினேஷன் – தடுப்பு மருந்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார் கவர்னர் தமிழிசை.
நாடு முழுவதும் கொரோனா வாக்சினேஷன் தொடங்கிவிட்டது. தெலங்காணா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாதில் உள்ள நிமிஸ் மருத்துவமனையில் வாக்சினேஷனைத் தொடங்கிவைத்தார். ஃப்ரண்ட் லைன் வாரியர்களுக்கு முதலில் வாக்சினேஷன் அளித்தார்கள்.
நிம்ஸ் மருத்துமனையில் முதல் டோசை ஒரு டாக்டருக்கும் கொரோனா நோடல் ஆபீஸருக்கும் சுகாதார ஊழியர் சந்திரகலாவுக்கும் அளித்தார்கள். ரிஜிஸ்டர் செய்து கொண்ட 30 பேருக்கு முதலில் வாக்சிசன் அளித்தார்கள். அதன் பின்பு கூட வாக்சினேஷன் தொடர்ந்து செய்தார்கள்.
மக்களின் உயிரைக் காப்பதற்கு மத்திய அரசாங்கம் பொறுப்போடு பணிபுரிந்து வருவதாக அவர் தெரிவித்தார். விஞ்ஞானிகளைப் பார்த்து பெருமைப்பட வேண்டும் என்று கவர்னர் குறிப்பிட்டார்.