பழனி கோவில்: உண்டியல் காணிக்கை 91 லட்சம்!

அடடே... அப்படியா? ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
pazhani-kovil

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திங்கள்கிழமை உண்டியல்களை திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இதில் முதல் நாள் காணிக்கை ரூ. 91 லட்சத்தை தாண்டியது.

தைப்பூசம் முடிந்ததும் இக்கோயில் உண்டியல்கள் திறக்கப்படவேண்டிய நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக காணிக்கையை எண்ண முடியாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை முதல் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மலை மீதுள்ள காா்த்திகை மண்டபத்தில் வைத்து தரம் பிரித்து எண்ணும் பணி தொடங்கியது.

முதல் நாள் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 91 லட்சத்து 42 ஆயிரத்து 530-ம், தங்கம் 467 கிராமும், வெள்ளி 9,020 கிராமும், 698 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.

இந்த உண்டியல் எண்ணிக்கையை மேலும் 2 நாள்களுக்கு தொடா்ந்து நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கையின் போது பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் இருந்தனா்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.